அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

0
122

தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் தொடங்கவிருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்குப் பின் தேர்வு நடத்துவது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கூட்டத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது.

இந்த நிலையில், ஏற்கனவே அனைத்து மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு நாளை (11.12.2023) தொடங்கவிருந்த நிலையில் மீண்டும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்புகள் சீரமைக்கப்பட்டு வரும் டிசம்பர் 13ஆம் தேதியன்று தேர்வுகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சரின் அறிவுறத்தலின் பேரில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here