என் வீட்டிற்குள் மீன் வந்துவிட்டது..! கார் மீது ஏறி மன்சூர் அலிகான் அலப்பறை!

0
56

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து பேசிய மன்சூர் அலிகான், ‘நான் வீட்டை கொஞ்சம் உயரமாக கட்டியதால் தப்பிவிட்டேன். ஆனால் வீட்டுக்குள் மீன் வந்துவிட்டது’ என கூறியிருக்கிறார்.

சென்னை மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெரும் பல்வேறு இடங்களில் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி நீரை திறந்துவிட்டதால் பல இடங்களில் தண்ணீர் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அது போல் புறநகர் பகுதிகளில் நாராயணபுரம் ஏரி உடைந்துவிட்டதால் ஏராளமான நீர் வெளியேறி பொதுமக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறுகையில், “இந்த தெரு அரும்பாக்கம் திருக்குமரபுரம் 3ஆவது தெரு. அங்கே கூவம் நதி நீர் வந்துவிட்டது. அங்கிருந்து என் வீடு 100 மீட்டர் தொலைவில் உள்ளது. எப்போதும் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டால் மழை வெள்ளம் வந்துவிடும். எதையும் செய்ய முடியாது. பெரும்பாலும் பட்டா இல்லாத நிலங்கள் என்பதால் வீடுகளை தாழ்வாக கட்டிவிட்டார்கள்.

நான் கொஞ்சம் உயரமாக கட்டியதால் தப்பிவிட்டேன். செம்பரம்பாக்கம் ஏரி மீன் என் வீட்டை தேடி வந்துவிட்டது. மிகப் பெரிய அதிசயம். என் வீட்டில் வளர்க்கும் வாத்துகள் சாப்பிட்டது போல மிச்சம் மீதியை நாங்கள் பொரித்து சாப்பிட வேண்டும். செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிடாவிட்டால் ஏரி உடைந்துவிடும். ஏரியை ஒட்டிய பகுதிகளில் வெள்ளம் வந்துவிட்டது. இவ்வளவு ஏன் ஏர்போர்ட்டிலும் தண்ணீர் வந்துவிட்டது.

மழை அதிகமாக வந்துவிட்டதால் ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நியாயத்தை பேசுகிறேன். கூவத்தின் ஓரம் உள்ள மக்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் இந்த வேதனைகளை தாங்க வேண்டியிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி உடைந்துவிட்டால் சென்னையே மூழ்கிவிடும். 1980ஆம் ஆண்டுகளில் குஜராத்தில் ஒரு பெரிய நகரம் மோர்பி.

இங்கு கடிகாரங்கள் செய்கிறார்கள். மிகப் பெரிய அணை உடைந்துவிட்டதால் அந்த நகரமே மூழ்கிவிட்டது. பெரும்பாலான மக்கள் இறந்துவிட்டார்கள். அரும்பாக்கத்தில் உள்ள தண்ணீரை எடுத்துவிடுங்கள். இந்த நீர் கூவம் ஆற்றின் வழியாக சென்று கடலில் கலக்க வேண்டும். இங்குள்ள மக்களுக்கு சாப்பாடில்லை. விறகு இருந்தால் கொடுங்கள். நான் என் வீட்டில் சமைத்து கொடுக்கிறேன். அரும்பாக்கம் மெட்ரோ அருகே பெரியார் பாதை வழியாக உள்ளே வர வேண்டும். பெரிய வண்டிகள் மட்டுமே உள்ளே வரும், சிறிய வண்டிகள் உள்ளே வராது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here