‘தந்தை பெரியாரின் புகழை போற்றி வணங்குகிறேன்’ – எடப்பாடி பழனிசாமி!

0
155

சென்னை: பெரியாரின் 50ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி பெரியார் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு தினம் இன்று (டிச.24) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பெரியாரின் நினைவு நாளில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவரை நினைவு கூர்ந்து தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மூடநம்பிக்கைகளால் மூழ்கிக் கிடந்த நம் சமூகத்தை விழித்தெழ வைத்த பகுத்தறிவாளர், சாதி, மத ரீதியான சமூக தீண்டாமைகளுக்கு எதிராக வெகுண்டெழுந்த புரட்சியாளர், நாடெங்கும் சமத்துவம் நிலவ போராடிய மாபெரும் தலைவர்.

தென்னிந்திய அரசியலின் மூத்த முன்னோடி பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here