‘தமிழ்நாட்டில் 35 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்’ – டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு!

0
134

DGP Shankar Jiwal: தமிழ்நாட்டில் 35 காவல் துணை கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆணையர்களும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கும் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடையாறு காவல் உதவி ஆணையராக இருந்த நெல்சன் தாம்பரம் உதவி ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருள் செல்வன் தாம்பரம் போக்குவரத்து காவல் துறை புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட மனித உரிமை ஆணைய காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த இளங்கோவன் திருவொற்றியூர் காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி பட்டாபிராம் காவல் உதவி ஆணையராக இருந்த சதாசிவம் வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரம் காவல் உதவி ஆணையராக இருந்த சீனிவாசன் சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையராக இருந்த மோகன் கடலூர் திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளராக மாற்றம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here