பொங்கல் பரிசு ரூ.1,000.. மக்களுக்கு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

0
73

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்கப்பணமும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், பெரிய கருப்பன், சக்கரபாணி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேபோல், மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள், பொங்கல் தொகுப்பு வழங்குவதை தொடங்கி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here