மிக்ஜம் புயல் நிவாரண நிதி.. இன்று முதல் டோக்கன் விநியோகம்?

0
154

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதோடு மழை வெள்ளத்தால் பொதுமக்களின் விலை உயர்ந்த வாகனங்கள், சான்றிதழ்கள், ஆவணங்கள் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர், திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று தங்களால் முடிந்த நிவாரணங்களைக் கொடுத்து வந்தனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக 6ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கான டோக்கன் வரும் 16ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது முன்கூட்டியே இன்று (டிச.14) முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வரும் 17ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் 6ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here