சென்னையில் பெய்து வரும் கனமழைக்கு இடையே வெள்ள நிலவரங்களை வார் ரூம் வழியாக அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை வட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.சென்னையில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று 20 இடங்களுக்கும் மேற்பட்ட பகுதிகளில் 100 செமீக்கும் அதிகமாக மழை பெய்தது. மழையினால் சரிந்த 12 மரங்களும் துரிதமாக அகற்றப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் சுரங்கப்பாதைகளில் தொடர் கண்காணிக்கப்பட்டு வருகிறது.நேற்று இரவு மழை பெய்த மழை காரணமாக சென்னையில் தேங்கிய தண்ணீர் உடனே வடிந்து உள்ளது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை 2- 3 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.
சென்னையில் பெய்து வரும் கனமழைக்கு இடையே வெள்ள நிலவரங்களை வார் ரூம் வழியாக அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த வார் ரூமில் பின் வரும் விஷயங்கள் செய்யப்படுகின்றன.வெள்ளம் தேங்கி உள்ள பகுதிகள் தொடர்ந்து கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.எத்தனை இடங்களில் வெள்ளம் தேங்கி உள்ளது அதில் எத்தனை சரி செய்யப்பட்டு உள்ளது என்பது 10 நிமிடத்திற்கு ஒரு முறை அப்டேட் செய்யப்படுகிறது.தற்போது மழை பெய்யும் இடம், மழை பெய்யும் அளவு அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய போகும் இடங்கள், மழை பெய்ய போகும் அளவு.சாலைகளில் மரங்கள் எங்கெல்லாம் விழுந்துள்ளன என்பதற்கான போர்ட்.மின்சாரம் தடை பட்ட இடங்களின் லிஸ்ட். அங்கே நிலவும் பிரச்சனைகள்.ரியல் டைம் காற்றழுத்த தாழ்வு பகுதி டிராக்கர் என்று புயல், மழை, வெள்ளம் தொடர்பான அனைத்து விஷயங்களும் வார் ரூமில் உள்ள திரைகளில் தெளிவாக காட்டப்பட்டு உள்ளன.அதில் தெளிவாக பெரிய பெரிய திரைகளில் எல்லாம் காட்டப்பட்டு அதிகாரிகள் கண்காணிக்க வசதியான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.