ரூ.15 கோடி மோசடி.. பவர்ஸ்டாருக்கு பிடிவாரண்ட்..!

0
85

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபத்திரத்தில் நடித்து வருபவர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன். இவர் மீது ஏற்கனவே மோசடி வழக்கு உள்ள நிலையில் தற்போது அவர் காசோலை மோசடியில் ஈடுபட்ட வழக்கில், நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

2010ஆம் ஆண்டு வெளியான ‘லத்திகா’ திரைப்படத்தின் மூலம் திரை உலகில் நடிகராக அறிமுகமான பவர்ஸ்டார், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் பிரபலமானார். இதனையடுத்து அவர் அடுத்தடுத்து பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.

இந்நிலையில், தற்போது பவர்ஸ்டார் சீனிவாசன் 15 கோடி ரூபாய்க் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, இறால் பண்ணை அதிபரை ஏமாற்றி காசோலை மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து இறால் பண்ணை உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணை குறித்த வழக்கு இன்று (டிச.08) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை பவர்ஸ்டார் சீனிவாசன் ஆஜராகாத நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தற்போது அவருக்குப் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து, ஜனவரி 2ஆம் தேதிக்குள், நீதிமன்றத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனை ஆஜர் படுத்த வேண்டும் எனச் சென்னை அண்ணாநகர் காவல் துறையினருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here