வேளச்சேரி கட்டிட விபத்து.. 2 பேர் கைது.. போலீஸ் தீவிர விசாரணை!

0
116

Chennai Floods: சென்னை, வேளச்சேரி கட்டிட விபத்து தொடர்பாக இரண்டு பேரைக் கிண்டி காவல்துறை கைது செய்தனர் . இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை வேளச்சேரியில் கேஸ் பங்க் அருகே கட்டிடம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக இரண்டு பேரைக் கிண்டி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை, வேளச்சேரியில் டிச.4ஆம் தேதி கேஸ் பங்க் அருகே ஐந்து பர்லாங்க் சாலை சந்திப்பில் கட்டுமான பணிகளுக்காகத் தோண்டப்பட்ட குழியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

கட்டடத்திற்குள் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாகத் தகவல் வெளியானது. உடனடியாக இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், இந்த விபத்தில் 8 பேர் சிக்கியிருப்பதாகக் கூறப்பட்டது. மேலும், கனமழை காரணமாக மீட்புப் பணியில் ஈடுபட முடியாமல் மீட்புக் குழுவினர் திணறி வந்தனர்.

இந்த நிலையில், 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து புயலின் போது 50 அடி கட்டுமான பள்ளத்தில் வெள்ளம் புகுந்து சகதியில் சிக்கிக் கொண்ட நரேஷ் மற்றும் ஜெயசீலன் ஆகியோரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக எழில், சந்தோஷ், சிவக்குமார் உள்ளிட்ட கட்டுமான பணிக்கான மேற்பார்வையாளர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 2 பேரை கிண்டி காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தனியார் கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர்களான எழில், சந்தோஷ் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை விடுத்தும் கூட தொழிலாளர்களை ஏன் தங்க வைக்கப்பட்டனர். அதோடு பள்ளத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது தொடர்பாகவும் காவல் துறையினர் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, வேளச்சேரி கட்டுமான விபத்தில் தவறு செய்தவர்களை தப்பிக்க விடமாட்டோம், தவறு செய்த நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதோடு அரசு மூலம் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here