‘குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் பாஜக மக்களை பிரிக்க முயல்கிறது’ – மம்தா பானர்ஜி ஆவேசம்!

0
101

Mamata Banerjee: மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் பாஜக மக்களை பிரிக்க நினைக்கிறது என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இன்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய முதலமைச்சர், “நாட்டின் பிற பகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி போட்டியிட்டாலும், மேற்கு வங்காளத்தில் பாஜக-வை எதிர்த்து திரிணாமூல் காங்கிரஸ்தான் போட்டியிடும்.

இந்த நாட்டின் குடி உரிமையைப் பொறுத்தவரை, ரேஷன், ஆதார் மற்றும் பான் கார்டு போன்ற உரிமைகள் உள்ள நீங்கள் அனைவருமே இந்நாட்டின் குடிமக்கள்தான். இந்த பாஜக, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் மக்களை பிரிக்க நினைக்கிறது. குடியுரிமையை வைத்து பாகுபாடு காட்ட முயல்கிறது; இது தவறானது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 20M Subscribers!.. உலகளவில் நம்பர் 1 இடத்தில் பிரதமர் மோடி!..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here