விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தொடக்கம்..! 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை!

0
79

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று (டிச.28) அவர் காலமானார். தற்போது விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், தொண்டர்கள், சினிமா பிரபலங்களும், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

Image Courtesy – Polimer

மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட இறுதி ஊர்வல வாகனத்திற்கு முன்னும் பின்னுமாக ஏராளமான தொண்டர்கள் நடந்து செல்கின்றனர். மேலும், தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த்திற்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படவுள்ளது.

இதையும் படிங்க: ‘நல்ல நண்பருக்கு விடைகொடுத்துவிட்டு செல்கிறேன்’ – கமல்ஹாசன் நேரில் அஞ்சலி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here