அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புதிய அரங்கம்: திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!

0
98

‘Madurai Jallikattu’: தமிழ்நாட்டின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக மதுரை மாவட்டத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் ரூ.62 கோடியே 77 லட்சத்து 62 ஆயிரம் நிதி ஒதுக்கீட்டில் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து காணும் வசதிகளுடன் இந்த அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அலங்காநல்லூர் கீழக்கரையில் கட்டுப்பட்டுள்ள மைதானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகின்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மற்றும் 300 வீரர்கள் களம் இறங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: ‘மதமும், கடவுளும் அரசியல்வாதிகள் கையில் சிக்குவது தீங்கை விளைவிக்கும்’ – நடிகர் கிஷோர் பதிவு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here