“கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை” திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

0
149

M.K.Stalin: சென்னையில் 393 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புறநகர் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.30) திறந்துவைத்தார்.

சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் கடந்த 12ஆம் தேதி 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். பேருந்து நிலைய கல்வெட்டு மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இதையும் படிங்க: பரவும் புதிய வகை கொரோனா..! ‘மக்கள் அச்சப்பட வேண்டாம்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here