தமிழ்நாட்டில் டிசம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் எவ்வளவு தெரியுமா?..

0
91

GST (Goods and Services Tax): இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்ட 2020-21 ஆம் நிதியாண்டுக்குப் பிற்கு ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் வசூல் குறித்து காணலாம்.

இந்தியாவில் ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2017-18ஆம் நிதியாண்டில் மாதம் ஒன்றிற்கு சராசரி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு கீழ் இருந்தது. எனினும், கொரோனா தொற்று பரவல் ஏற்பட்ட 2020-21ஆம் நிதியாண்டுக்குப் பின்னர் அதிரடியாக வசூல் அதிகரித்து, 2022-23ஆம் நிதியாண்டில் சராசரி வசூல் 1.51 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 929 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியிருக்கிறது. இது முந்தைய ஆண்டின் நவம்பர் மாத வசூலை விட 15 விழுக்காடு அதிகமாகும். இந்நிலையில், டிசம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் குறித்த தகவலை நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, இந்த நடப்பு நிதியாண்டின் டிசம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 882 கோடி ரூபாயாக உள்ளது.

இது கடந்த ஆண்டின் டிசம்பர் மாத வருவாயை விட 10.3 விழுக்காடு அதிகமாகும். அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 26ஆயிரத்து 814 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியிருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் 9ஆயிரத்து 888 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதம் 8ஆயிரத்து 324 கோடி ரூபாய் வசூலாகியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தென்கொரியா எதிர்க்கட்சி தலைவர் மீது கத்தி குத்து..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here