பிரமாண்டமாக நடைபெறும் சேலம் இளைஞரணி மாநாடு.. லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு..

0
115

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமக இளைஞரணி 2ஆவது மாநில மாநாடு இன்று (ஜன.21) நடைபெறுகிறது. இளைஞர் அணி தொடங்கப்பட்ட பிறகு நெல்லையில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மாநாடு நடந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது சேலத்தில் 2ஆவது மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டுக்காக சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் அருகில் சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக காலை 9 மணிக்கு கட்சி கொடியேற்றப்படுகிறது. கொடியை திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி ஏற்றி வைக்கிறார்.

காலை 9.30 மணிக்கு வரவேற்புக்குழு தலைவர் இளைஞரணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் வரவேற்புரை ஆற்றுகிறார். 9.45 மணிக்கு மாநாட்டு தலைவராக உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்யப்படுகிறார்.

10 மணிக்கு மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும், கட்சியின் முதன்மை செயலாளருமான அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றுகிறார். தொடர்ந்து 10.15 மணிக்கு மொழிப்போர் தியாகிகள் உருவப்படங்கள் திறந்து வைக்கப்படுகின்றன.

மாநாட்டு திறப்பாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. பேசுகிறார். மாநாட்டில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இளைஞரணி கண்ட களங்கள், திராவிட மாடல், எல்லோருக்கும் எல்லாம் உள்ளிட்ட 22 தலைப்புகளில் கட்சி நிர்வாகிகள் கருத்துரை வழங்குகின்றனர். மாலை 5.30 மணி அளவில் கனிமொழி எம்பி பேசுகிறார்.

மாலை 6.30 மணிக்கு இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு தலைவருக்கான உரையை ஆற்றுகிறார். 6.45 மணிக்கு பொருளாளர் டி.ஆர்.பாலு பேசுகிறார். இரவு 7 மணிக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் சிறப்புரையாற்றுகிறார்.

7.30 மணிக்கு விழா நிறைவு பேரூரையாக முதலமைச்சரும், கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். இதற்கிடையே மாநாட்டில் சிறப்பு நிகழ்வுகளாக மாநாட்டு மலர், 10 பாசறை நூல்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

தொடர்ந்து மாநாட்டில் கட்சியின் மூத்த முன்னோடிகள் மரியாதை செய்யப்படுகிறார்கள். மேலும், ‘நீட் விலக்கு நம் இலக்கு’ தபால் அட்டை ஒப்படைக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here