‘சினிமா விருதுகளில் இனி கேப்டன் பெயரிலும் விருது’ – அரசுக்கு கோரிக்கை வைத்த திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்!

0
157

Captain Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று (டிச.28) அவர் காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை ஒன்று வைப்பதாக கூறி செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்த்’ வசித்து வந்த சென்னை சாலிகிராமம் அல்லது விருகம்பாக்கம் பகுதியில் உள்ள பிரதான சாலைக்கு ‘கேப்டன்’ விஜயகாந்த்’ சாலை அல்லது ‘புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்’ சாலை என பெயரிட வேண்டும்.

தமிழக அரசால் வழங்கப்படும் திரைத்துறை விருதுகளில், இனி ‘கேப்டன்’ விஜயகாந்த் விருது அல்லது ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்த் பெயரில் சிறப்பான விருது வழங்க ஆவண செய்ய வேண்டும்.

மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்த்’ பிறந்த மதுரை மாவட்ட தலைநகரான மதுரையில் ‘கேப்டன்’ விஜய்காந்த்’ முழு உருவ சிலை ஒன்றை அரசு சார்பில் நிறுவ வேண்டும்.

திரைத் துறையிலும் அரசியலிலும் கேப்டன் விஜயகாந்த் செய்த காலத்தால் அழியாத சாதனைகளை பறை சாற்றும் விதமாக, இந்த கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோளாக முன் வைக்கிறோம்
நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தொடக்கம்..! 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here