சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நடிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் தற்போது கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “எளிமை, நட்பு, பெருந்தன்மை உள்ளிட்ட வார்த்தைகளை ஒரு மனிதருக்கு மட்டுமே சொல்ல முடியும், அவர்தான் விஜயகாந்த்.
ஒரு நட்சத்திர அந்தஸ்து வருவதற்கு முன்னர் எவ்வாறு பழகினாரோ அவ்வாறுதான் பெரிய நட்சத்திரமாக மாறிய பின்னரும் என்னிடம் பழகினார். எந்த அளவிற்கு பணிவு உள்ளதோ, அந்த அளவிற்கு நியாயமான கோபமும் இருக்கும்.
அவரது இந்த கோபம் எனக்குப் பிடிக்கும். இந்த குணத்தால்தான் அவர் மக்கள் பணிக்கு வந்தார் என்று நினைக்கிறேன். நல்ல நண்பருக்கு விடைகொடுத்துவிட்டு செல்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: ‘கடைசி தமிழன் உள்ளவரை கேப்டன் உயிருடன் இருப்பார்’ – சீமான் இரங்கல்!