‘என் அப்பா அம்மா இறந்தப்போ கூட இவ்வளவு அழுகல’ – மதுரை முத்து இரங்கல்!

0
122

Madurai Muthu video about Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று (டிச.28) அவர் காலமானார். அவரது உடல் இன்று தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில், தற்போது நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி பிரபலமுமான மதுரை முத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்று காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.

அந்த வீடியோவில் மதுரை முத்து பேசியதாவது, “எனது அப்பா அம்மா இறந்தபோது கூட நான் இப்படி அழவில்லை. நேற்று முதல் அழுது கொண்டே இருக்கிறேன். தமிழ்நாட்டிற்கான சாபக்கேடு என்றால் நல்ல தலைவர் கிடைக்கும்போது அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழப்பது தான்.

அதிலும் குறிப்பாக படங்களில் விஜயகாந்த்தின் நீதிமன்ற காட்சிகளையும் சண்டைக் காட்சிகளையும் பார்த்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்து எழுந்திருக்க முடியாமல் இருந்ததெல்லாம் ஒப்பிட்டு பார்க்கும்போது கண்கள் கலங்குகிறது. எந்த ஒரு பிரபலத்தின் இறப்பின்போதும் நான் இந்த மாதிரி ஒரு வீடியோவை பதிவிட்டதில்லை. அடக்க முடியாத துயரத்தினாலே இந்த வீடியோவை பதிவிடுகிறேன்.

என் வாழ்க்கையில் முதல் முறையாக இவ்வளவு அழுகை, இவ்வளவு சிந்தனை இவை எல்லாம் விஜயகாந்த்தின் இறப்புக்காக தான் ஏற்பட்டது. நேற்று இரவு 11 மணியளவில் கோயம்பேடு சென்று அங்கிருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்தேன்.
அத்துனை ரசிகர்களின் அன்பை சம்பாதித்து இருக்கிறார். தரையிலேயே படுத்துக்கிடந்தார்கள் ரசிகர்கள். இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுதுதான் இவர்கள் எல்லாம் கேப்டன் சேமித்துவைத்திருக்கும் சொத்துக்கள் என்பது தெரியவந்தது.

கேப்டன் விஜயகாந்த் தர்மம் தலைகாக்கும் என்று எப்போதுமே சொல்லுவார். விஜயகாந்த் தர்மத்துக்கு தர்மம் செய்தவர். இவர் விஷயத்தில் இந்த வார்த்தைகள் வெறும் வேடிக்கைதான். வருங்கால சந்ததியினருக்கு அலெக்சாண்டர் போன்றோரை உதாரணமாக காட்டுவதற்கு பதிலாக இவரை தான் காட்ட வேண்டும்.

ஒவ்வொரு விஷயத்தையும் இறங்கி செய்வார். சாதாரணமான கலைஞராக இருந்தாலும் அவரை கூப்பிட்டு அருகில் உட்கார வைத்து, அவர்களை ரசித்து உதவி செய்பவர். கேப்டன் எப்பொழுதும் நமது நினைவில் இருக்க வேண்டும் என்றால் நடிகர் சங்க கட்டடத்திற்கு கேப்டன் பெயரை வைக்க வேண்டும், கேப்டன் பெயரில் விருது வழங்க வேண்டும்.” என கண் கலங்கியபடி கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: ‘சினிமா விருதுகளில் இனி கேப்டன் பெயரிலும் விருது’ – அரசுக்கு கோரிக்கை வைத்த திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here