பரவும் புதிய வகை கொரோனா..! ‘மக்கள் அச்சப்பட வேண்டாம்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்!

0
71

Ma. Subramanian: பல உருமாற்றங்களுடன் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பருவமழையையொட்டி 10ஆவது வார சிறப்பு மருத்துவ முகாமினை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது, “கொரோனா தொற்றானது 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல உருமாற்றங்களுடன் பரவி வருகிறது.

தற்போது ஜே.என்.1 என்ற புதிய உருமாற்றம் பெற்றுள்ளது. இந்த தொற்று தெற்கு ஆசியாவில் பரவி வருகிறது. இது மிதமான பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றுக உள்ளது. ஜே.என்.1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

இந்த கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. புதிய கொரோனா உருமாற்றமானது அதிகளவிலான கூட்டு பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. ஆகையால் பொதுமக்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். பொதுமக்கள், புதிய வகை கொரோனா தொற்றைக் கண்டு அச்சப்பட தேவையில்லை” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 20M Subscribers!.. உலகளவில் நம்பர் 1 இடத்தில் பிரதமர் மோடி!..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here