சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தொடக்க விழா தொடங்கியது. பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழா தொடங்கியதும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு மிகப்பெரிய விளையாட்டு பாரம்பரியத்தை கொண்டுள்ளது. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், ஐந்து பிரிவுகளில் நடத்தப்பட்டன. கேலோ இந்தியா போட்டிகள் மூலம் கனவு நனவாகியுள்ளது” என தெரிவித்தார்.