கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..!

0
117

தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகை தந்தார். பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.

பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே அமைந்துள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்குச் சென்றார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் சாலை மார்கமாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்துக்குச் சென்றார். தொடர்ந்து பிரதமரை மலர் தூவி மக்கள் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், “நாடு முழுவதும் இருந்து சென்னை வந்துள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், விளையாட்டு ஆர்வலர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றாக, நீங்கள் ‘ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரதத்தின்’ உண்மையான உணர்வை வெளிப்படுத்துகிறீர்கள். தமிழ்நாட்டின் அரவணைப்பான மக்கள், அழகான தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் உணவு வகைகள் நிச்சயமாக உங்களை உணரவைக்கும்” என்றார்.

முன்னதாக டிடி பொதிகை தொலைக்காட்சியில் லோகோவை அறிமுகப்படுத்தி வைத்தார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் 22 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here