ராமர் கோவில் திறப்பு விழா: பக்தர்களுக்கு வழங்கவுள்ள ஒரு லட்சம் லட்டுகள் தயார்..

0
213

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷக விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக திருப்பதியில் ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு அதனை பேக்கிங் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் வரும் 22ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 11 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லட்சகணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய ஏற்பாடுகளை அம்மாநில அரசு தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக திருப்பதியில் ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு பேக்கிங் செய்யப்பட்டு வருகிறது. ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here