‘We Miss You sir’..! விஜயகாந்த்திற்கு ஆர்.கே.செல்வமணி இரங்கல்!

0
109

‘We Miss You sir’: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று (டிச.28) காலை 6:10 மணிக்கு அவர் காலமானார். அவரது உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தனது இரங்கல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “கேப்டன் விஜயகாந்த் மறைந்துவிட்டார் என்ற செய்தி என்னை மிகப்பெரிய துயரத்திற்கும், அதிர்ச்சிக்கும் ஆளாக்கியுள்ளது. அவரது இறுதிச் சடங்கிற்கு கூட என்னால் கலந்துகொள்ள முடியவில்லை.

நான் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உள்ளேன். தொலைக்காட்சி கூட பார்க்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. ரத்த அளுத்தம் கூடும் என அறிவுருத்தினர். என்னால் இந்த துயரத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. சாதாரண ஒரு செல்வமணி என்ற மாணவனாக இருந்த என்னை ஆர்.கே. செல்வமணி என உலகம் முழுவதும் கொண்டு சென்றதிக் கேப்டனுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

அவருடைய மனச அவருடன் பழகிய நாட்களா சொன்ன மாதக் கணக்கில், வருடக் கணக்கில் சொல்லலாம். அவ்வளவு மிகச் சிறந்த மனிதர் கேப்டன். விஜயராஜ் என்ற சிறந்த மனிதரை, விஜயகாந்த் என்ற சிறந்த நடிகரை, கேப்டன் என்ற சிறந்த தலைவரை இந்த தமிழகம் இழந்துவிட்டது.

அவர் எவ்வளவு பெரிய மனிதர் எவ்வளவு பெரிய இழப்பு என்பதை நிச்சயமாக காலம் உணர்த்தும். நான் கடைசியாக அவரது பிறந்தநாளன்று பார்க்கும்போது அவர் என் கைய இருகப் பிடித்துக்கொண்டார்.

ஒரு 35ஆண்டுகளுக்கு முன்னர் நான் மணிவண்ணனின் உதவி இயக்குநராக கேப்டனை பார்க்க சென்றபோது, மணிவண்ணன் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது இதேபோல எனது கையை இருகப் பிடித்துக்கொண்டு வாழ்த்தினார். அதேபோல, இப்பவும் கையைப் பிடித்துக் கொண்டு என்னை பார்த்துக்கொண்டே இருந்தார்.

அவர் பார்த்த பார்வையில், அவ்வளவு அன்பும், சொல்ல முடியாத விஷயங்களும் இருந்தது. அவரது இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் எனக்கு பெரிய சோகம் ஏற்பட்டிருக்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கு. கேப்டன்-னு பெயர் வைத்த செல்வமணியை எங்கே காணோம் என ரசிகர்கள் கேட்டபோது ரொம்ப கஷ்டமாக இருந்தது.

அவரது ஊர்வலம் இந்த மருத்துவமனையைத் தாண்டி போகும்போது அந்த சத்தம் நெருப்பு போல எனது காதில் பதிந்தது. அவரது மனைவி, மகன்கள், கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். We Miss You sir..!” எனக் கண்ணீர் மல்க பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: ‘என் அப்பா அம்மா இறந்தப்போ கூட இவ்வளவு அழுகல’ – மதுரை முத்து இரங்கல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here