பணமோசடி வழக்கு: ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கில் திடீர் திருப்பம்..! நீதிபதிகளின் உத்தரவு என்ன?

0
87

ஜார்க்கண்டில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார். இதனிடையே, நிலமோசடி செய்து கோடிக்கணக்கான பணத்தை பரிமாற்றம் செய்தத கூறப்படுகிறது.

இந்த முறைகேட்டில் ஈடுபட்டததற்காக ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்தது. சட்டவிரோத பண பரிமாற்றம், நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது.

இருந்தபோதிலும், அவர் ஆஜராகவில்லை. இறுதியாக கடந்த ஜனவரி 20ஆம் தேதி அமலாக்கத்துறை முன் ஹேமந்த் சோரன் ஆஜராகினார். தொடர்ந்து அவரிடம் வழக்குத் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரிடம் இருந்த 36 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரனிடம் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர்.

பலமணி நேரம் நடந்த விசாரணைக்கு பின் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அமலாக்கத்துறையினர் கைது செய்வதற்கு சில மணிநேரத்திற்கு முன்பாக ஹேமந்த் சோரன் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதேபோல், கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. ஆனால், ஹேமந்த் சோரன் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் உத்தியை மாற்றி உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடிவெடுத்தனர்.

இதற்காக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றனர். இதனைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனு தொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணை நடைபெற்றது.

அப்போது, “நீங்கள் உயர் நீதிமன்றத்தில் ஏன் மனு தாக்கல் செய்யவில்லை?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், ‘உயர் நீதிமன்றங்கள் அரசியலமைப்பு நீதிமன்றங்கள். இன்று நாம் ஒருவரை இதுபோன்று அனுமதித்தால், அனைவரையும் பின்னாளில் அனுமதிக்க வேண்டும்.

நீதிமன்றங்கள் அனைவருக்குமானது. எனவே உயர் நீதிமன்றத்தை நாடுங்கள்’ என குறிப்பிடப்பட்டது. இதற்கு ஹேமந்த் சோரன் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், “உச்ச நீதிமன்றத்துக்கு தன்னிச்சையான அதிகாரங்கள் உள்ளன என்று கபில் சிபல் வாதிட்டார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் “ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. எனவே, உயர் நீதிமன்றத்தை தான் நீங்கள் நாட வேண்டும்” என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here