‘தமிழ்நாட்டை விளையாட்டுத்துறை தலைநகராக மாற்றுவதே இலக்கு’ – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு..!

0
100

இந்தியாவிலேயே முதல் முறையாக பாரா வீரர்களுக்கு 6 விளையாட்டு அரங்கங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன என்று மு.க ஸ்டாலின் கூறினார்.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர், “இந்தியாவின் விளையாட்டுத்துறை தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவதே இலக்காக கொண்டுள்ளோம்.

இந்தியாவிலேயே முதல் முறையாக பாரா வீரர்களுக்கு ஆறு விளையாட்டு அரங்கங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து துறைகளும், அனைத்து மாவட்ட சமூக வளர்ச்சிகள் என்பதை உள்ளடக்கமாகக் கொண்ட திராவிட மாடல் ஆட்சியில் உழைத்து வருகிறோம்.

ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பதே தமிழ்நாட்டின் இலக்காக உள்ளது. அதேபோல, விளையாட்டில் தமிழ்நாட்டை இந்தியாவில் முதன்மை இடத்திற்கு கொண்டு செல்வதும் இலக்கு” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘ஊழல் இல்லாத விளையாட்டு துறை’ – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேச்சு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here