மறைமுகமாக கட்சிக்கு தனது பெயரை வைத்த விஜய்?..

0
129

Tamizhaga vetri kazhagam: நடிகர் விஜய் தான் அரசியலுக்கு வரவுள்ளதாகவும் விரைவில் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், டெல்லி சென்று இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்து விட்டு, அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

அதன்படி, நடிகர் விஜய்யின் கட்சியின் பெயர் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மூன்று பக்கங்களில் அறிக்கை வெளியிட்டார். பின்னர், விஜய் அரசியலின் வருகையை ஒட்டி அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது விஜய்யின் கட்சியின் பெயரான ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் விஜய் மறைமுகமாக தனது பெயரை இணைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

அதன்படி, TVK என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியின் பெயர் ‘தளபதி விஜய் கழகம்’ என்பதே அர்த்தம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, N.R. Congress என்று அழைக்கப்படும் பெயர் ‘Namathu Rajiyam Congress’ என அழைக்கப்படுகிறது. ஆனால், ‘N.Rangasamy Congres’ என்பதே பொருள் என கூறப்பட்டு வருகிறது. அதேபோல், YSR Congress என்று அழைக்கப்படும் ‘Yuvajana Sramika Rythu’ என்பது பொருள் அல்ல Y.S Rajasekhara Reddy என்பதே பொருள் என கூறப்படுகிறது.

அந்த வகையில், தற்போது நடிகர் விஜய்யும் TVK என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியின் பெயர் ‘தளபதி விஜய் கழகம்’ என்ற அர்த்தத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here