துணை முதலமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்?.. அரசியல் வட்டாரங்கள் கூறுவது என்ன?

0
101

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறி வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி, கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.

அதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து, சில நாட்களில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியது.

ஆனால், தற்போது வரை எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இருந்தபோதிலும், தற்போது உதயநிதி ஸ்டாலின், விரைவில் துணை முதல்மைச்சராக நியமிக்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் வரும் ஜனவரி 21ஆம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாடு முடிந்ததும், அடுத்த ஓரிரு தினங்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் ஜனவரி 28ஆம் தேதி வெளிநாடு செல்லு உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே ஜனவரி 24ஆம் தேதி உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ‘அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு’ – பிரதமர் மோடி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here