‘விஜயகாந்த் உடலை பார்த்து கண்கலங்கிய விஜய்!

0
153

Vijay paid tribute to Vijayakanth: தேமுதிக நிறுவனரும் நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று (டிச.28) காலை 6:10 மணிக்கு காலமானார். அவரின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்கான வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், சினிமா துறையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நேரில் வர முடியாத நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் வீடியோ மூலம் தங்களது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர். அந்த வகையில், விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். மக்கள் கூட்டத்திற்குள் முண்டியடித்த படி விஜய் உள்ளே சென்றார்.

நேராக சென்று விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பேழையின் மீது கைகளை வைத்தபடி கண்ணீர் விட்டு விஜய் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரேமலதா மற்றும் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் ஆறுதல் கூறினார்.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்கான வைக்கப்பட்ட உடல் தீவுத் திடலுக்கு மாற்றியுள்ளனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து காலை 6 மணிக்கு விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டது.

மதியம் 1 மணி வரை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

இதையும் படிங்க: ‘ஒரு கண்ணில் துணிச்சல், மறு கண்ணில் கருணை’ – விஜயகாந்த்திற்கு இரங்கல் தெரிவித்த சூர்யா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here