Vijayakanth Passed Away: உடல்நலக்குறைவால் விஜயகாந்த் காலமானார்..! கதறி அழும் தொண்டர்கள்!

0
206

Vijayakanth Passed Away: தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) உடல்நலக்குறை காரணமாக நேற்று முன்தினம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் காலமானார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் 18ஆம் தேதி நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், மருத்துவ சிகிச்சையில் உடல்நலம் தேறிய நிலையில், கடந்த 11ஆம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதற்கிடையில் விஜயகாந்த் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக தேமுதிக தலைமை அலுவலகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை அலுவலகம் இன்று அறிவித்திருந்தது.

அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த விஜயகாந்த் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

இதனைத் தொடர்ந்து, அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. வீட்டின் முன்பு தொண்டர்கள் குவித்து வரும் நிலையில், அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here