‘விஜயகாந்த் அண்ணன் ஒரு சாமி’ – நடிகர் விஷால்..!

0
156

Actor Vishal Paid Tribute to Vijayakanth: கேட்பன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக டிச.28ஆம் தேதி உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

தொடர்ந்து நேரில் அஞ்சலி செலுத்தாத நடிகர்கள், தற்போது தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்று மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா ஆகியோர் சென்று தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

மேலும், நடிகர் விஷால், விஜயகாந்த்தின் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அழுதுகொண்டே ‘உடனடியாக வராததற்கு என்னை மன்னித்துவிடுங்கள் சாமி’ என கதறினார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விஜயகாந்த் அண்ணன் ஒரு சாமி, நல்ல மனிதர், தைரியமான அரசியல்வாதி. ஒருவர் மறைந்த பிறகுதான் அவர் சாமி என அழைக்கப்படுவார். ஆனால், விஜயகாந்த் வாழும் போது மக்களால் அவர் சாமி என அழைக்கப்பட்டவர்” என்றார்.

மேலும், “தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். கேப்டன் விஜயகாந்த்திற்கு நடிகர் சங்கம் சார்பில் ஜனவரி 19ஆம் தேதி இறங்கல் கூட்டம் நடத்தப்படவுள்ளது” என்றார்.

முன்னதாக கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த தினத்தன்று தான் வெளிநாட்டில் இருப்பதால் இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள முடியவில்லை என கண்ணீர் மல்க பேசி நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி உயிரிழந்த யஷ் ரசிகர்கள்.. நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here