நாட்டு சர்க்கரை எடுத்துக்கொள்வதால் உடலுக்கு பலவித நன்மைகள் ஏற்படுகிறது. உடல் பருமன், முதல் மாதவிடாய் வலி வரை அனைத்திற்கும் இது நன்மை தருகிறது.
நாட்டு சர்க்கரையில் பல வித நலன்கள் இருக்கிறது. இவற்றில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளன. இது உடல் வலிமைக்கு மிகவும் உதவும். நாட்டு சர்க்கரையில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜின்க், செலினியம், இரும்புசத்து போன்றவை நிறைந்துள்ளதாம்.
வெள்ளை சர்க்கரையை போன்று இதில் எந்த வித வேதி பொருட்களும் கலப்பதில்லை. முற்றிலுமாக இயற்கை ரீதியாகவே இதனை தயார் செய்கின்றனர். ஆதலால், இயற்கையாகவே இதில் எண்ணற்ற தாதுப்பொருட்கள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்திருக்கும். அத்துடன், எந்த வித பாதிப்பையும் இது உடலுக்கு தராது.
பெண்களின் மிக கொடுமையான நாட்களாக கருதப்படும் இந்த மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலி உண்மையில் மோசமானதுதான். இந்த வலியை போக்கும் மருந்தாக நாட்டு சர்க்கரை செயல்படும்.
கர்ப்பப்பையின் தசைகளை இவை தளர்த்தி மாதவிடாய் வலியை குறைத்து விடும். தேவையற்ற உணவுகளை சாப்பிட்டு விட்டு பிறகு உடல் எடை கூடிவிட்டதே என வருத்தப்படுபவரா நீங்கள்..? இனி இந்த கவலைக்கு தீர்வை தருகிறது நாட்டு சர்க்கரை.
இதில் மிக குறைந்த அளவே கலோரிகள் இருக்கிறதாம். எனவே, வெள்ளை சர்க்கரைக்கு பதில் இவற்றை பயன்படுத்தினால் உடல் எடை குறைய அதிகம் உதவும். குழந்தை பிறந்த பின்னர் கர்ப்பிணிகள் உடல் அளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பர்.
இதனை அவர்கள் சரி செய்ய பல வித வழிகளை கையாண்டும் பல பெற்றிருக்க மாட்டார்கள். உடனடியாக பழைய நிலைக்கே திரும்ப நாட்டு சர்க்கரை பெரிதும் உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இன்று பலரும் மூச்சு திணறல் கோளாறுகளால் அவதிப்படுகின்றனர். இதற்கு ஒரு அருமையான தீர்வாக இந்த நாட்டு சர்க்கரை இருக்கிறது. இவற்றை பயன்படுத்தி வந்தால் ஆஸ்துமா பிரச்சினை குணமடையும்.
நாட்டு சர்க்கரையை உங்களின் உணவில் சேர்த்து கொண்டால் இந்த ஜீரண கோளாறுகள் விரைவிலே குணமாகும். அஜீரண கோளாறுகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனே நீரில் நாட்டு சர்க்கரை மற்றும் சிறிது இஞ்சியை சேர்த்து கொதிக்க விட்டு குடியுங்கள்.
வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரையை பயன்படுத்தினால் பலவித நன்மைகள் கிடைக்கும். இவை சோர்வாக உள்ள உடல் செல்களை புத்துணர்வூட்டி சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும். பருவ காலங்களில் சளி தொல்லையால் பலர் பாதிக்கப்படுவர். இதனை சரி செய்ய நாட்டு சர்க்கரை உள்ளது.
இவை சளி, இரும்பல், ஜலதோஷம் போன்றவற்றை உடனடியாகவே குணமாக்கும். சளிக்கும் சிறிது ஐஜினி மற்றும் நாட்டு சர்க்கரையை சேர்த்து நீரில் கொதிக்க விட்டு குடித்து வந்தால் இதிலிருந்து தப்பிக்கலாம்.