எல்லா காலங்களிலும் பசுமையாக இருக்கும், மருத்துவ மரம் என்ற அழைக்கப்படும் மருதம் மரத்தின் பட்டை. மருத மரத்தின் அடியில் அரை மணி நேரம் அமர்ந்திருந்தால் எந்த நோயும் வராமல் தடுக்கிறது. மருத மரத்தின் பட்டைகள் துவர்ப்பு சுவை கொண்டவை. மருதம் பட்டை கோடைக்காலங்களில் உடல் உஷ்ணம் குறைக்க உதவும். இது இதயத்திற்கு சிறந்த பாதுகாவலனாக செயல்படுகிறது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதன் பொடியை வெது வெதுப்பான தண்ணீயில் கலந்து குடித்து வந்தால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம், ரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதால் அடைப்பு உண்டாகும் அபாயம் உண்டு.
இது கொழுப்பை கரைத்து அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மூச்சுவிடும் போது திணறல், காய்ச்சலோடு இருக்கும் காலத்தில் மருதம் மரத்தின் பட்டையை கொண்டு கஷாயம் செய்து குடித்துவரலாம்,வைட்டமின் சி மருதம்பட்டையில் மிகுதியாக அடங்கி உள்ளது,மருதம் பட்டை தொடர்ந்து எடுத்து வரும்போது தூக்கமின்மை, நீரிழிவு பிரச்சினை, கல்லீரல் பிரச்சினை போன்றவைகள் கட்டுக்குள் வரும்.மருதம் பட்டை – 100 கிராம் அளவிலும், சீரகம் – 25 கிராம் அளவிலும் சேர்த்து கொதிக்கவைத்து ஆறிய நிலையில் குடிநீராக தினமும் குடித்து வந்தால் இதயம் வலுவாகும்.
மன அழுத்தம் நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும். இதன்மூலம் ரத்த குழாய்களில் கொழுப்பு அதிகமாக படிவதும் தடுக்கப்படும்.சளி மற்றும் இருமல் இருப்பவர்களும் இதன் பொடியை தேன் கலந்து சாப்பிடலாம்.