முருங்கை ககீரையின் சவால்!!!

0
158

உடல் கழிவுகளை வெளியேற்றினாலே, முக்கால்வாசி உடல்நலக்கோளாறுகள் நம்மை அண்டாது.. அந்தவகையில், இதற்கு உதவியாக இருக்கக்கூடிய கீரைகள் ஒருசிலவற்றை பார்ப்போம்.நாம் உண்ணும் உணவு, குடிக்கும் குடிநீர், சுவாசிக்கும் காற்று இவை அனைத்துமே 100 சதவீதம் தூய்மையானது என்று சொல்லிவிட முடியாது.. ஒருசில நச்சுக்களும், கிருமிகளும் அறியாமலேயே உடலில் கலந்துவிடுகின்றன.அதேசமயம், இவைகளை வெளியேற்றவும், ஆரோக்கியமான உணவும், சுத்தமான குடிநீரும் தேவையாக இருக்கிறது. மஞ்சள், தேன், பூண்டு, இஞ்சி, மிளகு, சீரகம் போன்ற பொருட்களை சமையலில் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும். இதனால், கழிவுகள், நச்சுக்கள் உடலிலிருந்து நீங்குவதுடன், எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்யும்.இதைத்தவிர, நெல்லிக்காய், கடுக்காய், தான்றியக்காய் அடங்கிய திரிபலா சூரணத்தை தவறாமல் எடுத்து கொள்ளலாம். இதனால், உடல் கழிவுகள் நீங்குவதுடன், உடலும் ஆரோக்கியம் பெறும். இவைகளை தவிர, சில வகை கீரைகளும் நச்சுக்களை அகற்றுவதில் முக்கியத்துவத்தை பெறுகின்றன.

முருங்கைக்கீரையை எடுத்து கொண்டால், சிறுநீரின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.. இதனால் கழிவுகள் வெளியேறும் நரம்பு பலவீனத்தை தடுத்து நிறுத்தும். தோலில் உள்ள அலர்ஜிகளை நீங்கிவிடும்.. முருங்கைக் கீரை உண்பதால் சொறி, சிரங்கு முதலிய நோய்கள் நீங்கும்.இந்த முருங்கைக்கீரையில் உயிர்ச்சத்துக்களும் புரதப் பொருள்களும் சுண்ணாம்பு, இரும்புச் சத்துக்களும் நிறைந்துள்ளன… எனவே, முருங்கை கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால். அப்படி கீரை கிடைக்காதவர்கள், கீரை பவுடரை வாங்கி பயன்படுத்தலாம்.. இந்த பவுடரில் சூப், ஸ்மூத்திகளில் சேர்த்து குடிக்கலாம். ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் மிகுதியாக உள்ளதால், உடலிலுள்ள கிருமிகளையும், நச்சுக்களையும் வெளியே தள்ளுகிறது.அடுத்ததாக பொன்னாவரை கீரையையும் சொல்லலாம். உடலிலுள்ள கழிவுகளை நீக்கி, உடலை பொன்னை போல பேணிக்காக்க கூடியது என்பதால், இந்த பெயர் வந்ததாம். உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும், குடல் புழுக்களையும், கெட்ட நீரையும் வெளியேற்றிவிடுவதால், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு பொன்னாவரை, பெரிதும் கைகொடுக்கிறது. வாரம் 2 முறையாவது சமைத்து சாப்பிட்டு வந்தாலே, ஊளைச்சதை குறைய துவங்கும் மற்ற கீரைகளை போலவே கடைந்து சாப்பிடலாம். ஆனால், 2, 3 முறை மலம் கழிக்க நேரிடும் என்றாலும், உடலிலுள்ள கெட்ட நீர், கழிவுகள் வெளியேறிவிடுமாம். அதேபோல, இந்த கீரையை வாரம் ஒருமுறை மட்டுமே சாப்பிட வேண்டுமாம்.. கர்ப்பிணிகள், குடல் புண், குடல் அழற்சி இருப்பவர்கள் இந்த கீரையை தவிர்க்க வேண்டும்.அடுத்ததாக காசினி கீரைகள் உடல் கழிவுகளை வெளியேற்றுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன..

உடலிலுள்ள கிருமிகள், நச்சுக்கள் வெளியேற்றி, ரத்தம் புத்துணர்ச்சியை பெறுவதற்கு இந்த கீரைகள் உதவுகின்றன.. கீரைகளில் காசினி கீரையை, பாதாம் பருப்புடன் வாரம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமாகும் அதேபோல, வல்லாரை கீரையை வாரம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டால், கழிவுகள் அண்டாது.. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் அற்புத சக்தி இந்த வல்லாரை கீரைக்கு உண்டுஇந்த கீரையை கடைந்து சாப்பிடலாம் அல்லது துவையல் போல சாப்பிடலாம்.. அல்லது வெறும் வல்லாரைக்கீரையை அரைத்து விழுதாகவே விழுங்கலாம்.. இப்படி செய்வதால், கழிவுகள் நீங்குவதுடன், எந்த வித தோல் நோயாக இருந்தாலும் சரியாகிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here