‘அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு’ – பிரதமர் மோடி…

0
198

குஜராத் மாநிலத்தின் தலைநகரான காந்திநகரில் இன்று ‘துடிப்பான குஜராத் உலக உச்சி மாநாடு’ என்ற பெயரில் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி மாநாட்டில் உரையாடினார்.

அப்போது பேசிய அவர், “உலகின் மூன்று பெரிய பொருளாதாரங்களில் இந்தியாவும் இருக்கும் என்று அனைத்து பெரிய தரமதிப்பீட்டு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் வேகமாக மாறிவரும் உலக அரங்கில், இந்தியா உலகின் நண்பனாக முன்னோக்கி செல்கிறது.

பொதுவான இலக்குகளை முடிவு செய்து அவற்றை அடைய முடியும் என்ற நம்பிக்கையை உலகிற்கு இந்தியா கொடுத்துள்ளது. உலக நன்மையை நம்பும் குரலாக, உலக தெற்கின் குரலாக, வளர்ச்சியின் இயந்திரமாகப் பார்க்கிறது.

மேலும், உலகப் பொருளாதாரத்தில், தீர்வுகளைக் கண்டறிவதற்கான தொழில்நுட்ப மையமாகவும், திறமையான இளைஞர்களின் அதிகார மையமாகவும் இந்தியா இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன, அடுத்த 25 ஆண்டுகளில் 100 ஆண்டுகள் கொண்டாடுவோம். இந்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு ‘அமிர்த காலம்’ காலம் தான்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “அடுத்துள்ள 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here