அயோத்திக்கு வந்தடைந்த உலகில் மிகப்பெரிய பூட்டு.. வியந்து பார்க்கும் பக்தர்கள்..

0
163

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (ஜன.22) நடைபெற உள்ளது. இந்த ராமர் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். மேலும், இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், உலகம் முழுவதும் மற்றும் உள்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து கடவுள் ராமர் மீது பக்தி கொண்டவர்கள் பல்வேறு வகையான பொருட்களை அயோத்திக்கு அனுப்பி வருகின்றனர்.

அந்த வகையில், ராம பக்தர்களால் தயாரிக்கப்பட்ட 400 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய பூட்டு மற்றும் ஆயிரத்து 265 கிலோ எடை கொண்ட லட்டு பிரசாதம் ஆகியவற்றை அயோத்திக்கு அனுப்பி இன்று வந்தடைந்துள்ளது. இவைகளை கோயில் நிர்வாகத்திடம் விரைவில் ஒப்படைக்கவுள்ளனர்.

இந்த ஆயிரத்து 265 கிலோ எடை கொண்ட லட்டு பிரசாதத்தை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்ரீராம் கேட்டரிங்
சர்வீசஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நாகபூஷணம் ரெட்டி கூறுகையில், “எனது குடும்பத்திற்கும், தொழிலுக்கும் கடவுள் ஆசி வழங்கியிருக்கிறார்.

நான் உயிருடன் இருக்கும் வரை தினமும் ஒரு கிலோ லட்டு தயாரிக்க வேண்டும் என உறுதி ஏற்றுள்ளேன். அயோத்தி ராமர் கோவிலுக்காக தயாரிக்கப்பட்ட லட்டுவிற்கு உணவுத்துறை அதிகாரிகளிடம் இருந்து சான்றிதழ் பெற்றுள்ளேன். ஒரு மாதம் ஆனாலும் இந்த லட்டு கெட்டுப்போகாது. 3 நாட்களில் 25 பேர் சேர்ந்து இந்த ஆயிரத்து 265 கிலோ
லட்டுவை தயாரித்துள்ளோம்” என்றார்.

உலகின் மிகப்பெரிய பூட்டை, உத்திரப் பிரதேச மாநிலம் அலிகார்க்கைச் சேர்ந்த முதிய தம்பதி சத்ய பிரகாஷ் சர்மா மற்றும்
ருக்மினி சர்மா ஆகியோர் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தயாரித்துள்ளனர்.

சத்ய பிரகாஷ், சர்மா சமீபத்தில் காலமான நிலையில் இந்த பூட்டை அயோத்தி கோவிலுக்கு வழங்க வேண்டும் என்ற அவர்களது ஆசையை நிறைவேற்ற அவர்களது உறவினர்கள் இந்த பூட்டுக்கு பூஜை செய்த பிறகு வாகனம் மூலம் அயோத்திக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here