‛அயோத்தி சென்று பக்தர்களுக்கு இடையூறு செய்யாதீர்கள்’ – மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை!

0
93

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் ஜன.22ஆம் தேதி பிராண பிரதிஷ்டை முடிந்த நிலையில், நேற்று முதல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் நேற்று ஒரே நாள் மட்டும் லட்சக்கணக்கான பேர் சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் பேசும்போது, “தற்போது அமைச்சர்கள் யாரும் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டாம்.

அங்கு, கூட்டம் அதிகளவில் உள்ளது. மத்திய அமைச்சர்கள் செல்லும் போது பக்தர்கள் தரிசனம் தடைபடும். இதனால், மத்திய அமைச்சர்கள் மார்ச் மாதத்திற்கு பிறகு ராமர் கோவிலுக்கு செல்லலாம்” என அறிவுரை வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here