இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பறந்த டிரோன்கள்..! சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படை..!

0
136

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போதைப்பொட்களுடன் பறந்து சென்ற இரண்டு டிரோன்களை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் தானோ குர்த் கிராமம் உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே அமைந்துள்ள இந்த கிராமத்தை நோக்கி இன்று ஒரு டிரோன் பறந்து சென்றுள்ளது. இதைப் பார்த்த ரோந்து பணியில் இருந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர்.

அந்த டிரோன் வயல்வெளியில் விழுந்தது. உடனடியாக அந்த டிரோனை எல்லை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றினர். தொடர்ந்து அந்த டிரோனை சோதனை செய்ததில், அது சீனாவில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல் இந்த டிரோனை அனுப்பி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் அந்த டிரோன் மூலம் அனுப்பப்பட்ட 540 கிராம் ஹெராயின் போதைப்பொருளை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு டிரோன் அதே கிராமத்திற்குள் பறந்து வந்தது தெரியவந்தது. அந்த டிரோனையும் பாதுகாப்புப்படையினர் கைப்பற்றினர்.

மேலும் அந்த டிரோன் மூலம் அனுப்பப்பட்ட பையில் இருந்து 430 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இரண்டு டிரோனில் இருந்து மொத்தம் 970 கிராம் ஹெராயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து பஞ்சாப் எல்லை பாதுகாப்புப்படையினர் எக்ஸ் வலைதளத்தில் டிரோனின் வீடியோ மற்றும் புகைப்படங்களப் பதிவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here