இன்ஸ்டாவில் ‘RIP’ பதிவு போட்டுவிட்டு இளைஞர் தற்கொலை.. காரணம் என்ன?

0
112

எர்ணாகுளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனகுதானே இறங்கள் பதிவைப் போட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநில எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மல் ஷெரீப். 28 வயதான இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை (டிச.8) அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் பதிவு ஒன்றைப் பதிவிட்டார்.

அந்த பதிவில் தனது புகைப்படத்துடன் ‘RIP Ajmal Shereef 1995-2003’ எனக் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு இன்ஸ்டாவில் 14ஆயிரம் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

இதனைக் கண்ட அவரது நண்பர்கள் இதனைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை. ஆனால், ஷெரீப் இன்ஸ்டாவில் பதிவை வெளியிட்டுவிட்டு வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், ஷெரீப்பின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஷெரீப்பின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், ஷெரீப்பிற்கு நல்ல வேலை கிடைக்காததால் அவர் விரக்தியிலிருந்து வந்ததாகவும், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்தது. தொடர்ந்து, காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here