‘உங்க அப்பன் வீட்டுப் பணமா?’.. உதயநிதி பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!

0
163

டெல்லி: தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (டிச.22) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ‘மக்கள் பணத்தைத்தான் நிதியாகக் கேட்கிறோம்.. அவர்கள் அப்பா வீட்டுக் காசை கேட்க வில்லை’ என்று அமைச்சர் உதயநிதி விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், “அவருடைய பாஷை எப்போதும் அப்படித்தான் இருக்கும். அவுங்க அப்பன் வீட்டுப் பணமா என்று கேட்கிற மாதிரி எல்லாம் பேசுகிறவர்கள்.. அவுங்க அப்பன் வீட்டுச் சோற்றை வைத்துக் கொண்டு இன்றைக்குப் பதவியை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாரா அப்படியென்று கேட்க முடியுமா?

மக்களால் தேர்வு செய்யப்பட்டு வந்து இருக்கிறார். அவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை கொடுக்கத்தானே செய்கிறோம். இந்த அப்பன் வீடு பேச்செல்லாம் அரசியலில் நல்லது இல்லை. அவர் அரசியலில் இன்னும் முன்னுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார் அல்லவா; அந்த குடும்பமும் ஆசைப்படுகிறது அல்லவா; பேசுகிற பாஷை, மொழியைப் பார்த்துப் பேசவேண்டும்.

அவுங்க தாத்தா எப்பேர்ப்பட்ட தமிழ் அறிஞர். அதனால், பதவிக்கு ஏற்ற மாதிரி பேச வேண்டும். அளந்து பேச வேண்டும். இதை நான் பொதுவாக சொல்கிறேன். அவர் மீது காழ்ப்புணர்ச்சியோடு சொல்லவில்லை. இதற்கு முன்னாடி ஒரு உதாரணம் பார்த்தோம். இப்போது இன்னொரு உதாரணம் பார்க்கிறோம்.

தமிழ்நாட்டில் மக்கள் எல்லோரும் தண்ணீரில் மிதந்துகொண்டு அவதிப்பட்டு வருகிறார்கள், அவர்களுக்கு நிதி கேட்டவுடன் முன்பணமாக 900 கோடி ரூபாயை உடனே கொடுத்துவிட்டோம். ஆனால், இவர் உங்க அப்பன் வீட்டுப் பணத்தைத் தருகிறீர்களா? எனப் பேசுகிறார். இதெல்லாம் நல்லது இல்லை” எனக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here