2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘I.N.D.I.A.’ கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் 4ஆவது ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்நிலையில் இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு, பரப்புரையைத் தொடங்குவது குறித்து விவாதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. காணொளி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.