கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. 24 மணி நேரத்தில் 128 பேருக்கு பாசிடிவ்!

0
100

Covid 19 cases: கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இன்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா தொற்று பாதிப்பால் 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 128 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3ஆயிரமாக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 296 ஆக உள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், “கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், பயப்பட வேண்டியது இல்லை. தொற்று நோய்களை நிர்வகிக்க மருத்துவமனைகள் போதுமான அளவில் உள்ளன” என்றார்.

மேலும், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சக இணையதளத்தில் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: அடேங்கப்பா..! நாட்டு சர்க்கரையில் இவ்வளவு நன்மைகளா..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here