கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..

0
175

பிரதமர் மோடி கடந்த ஜனவரி 2 மற்றும் 3ஆம் தேதிகளில் தமிழகம், லட்சத்தீவு மற்றும் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இரண்டாம் நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி மீண்டும் கேரளாவுக்குச் செல்லவுள்ளார்.

தொடர்ந்து, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜனவரி 16ஆம் தேதி எர்ணாகுளம் மாவட்டம் கொச்சிக்குச் செல்லவுள்ளார். அங்கிருந்து சாலை மார்கமாக சென்று மக்களைச் சந்திக்கிறார். பின்னர் இரவில் கொச்சியில் ஓய்வெடுக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜனவர் 17ஆம் தேதி காலை 8 மணிக்கு திருச்சூர் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் நடைபெறும் பாஜக பிரமுகரும், நடிகருமான சுரேஷ் கோபியின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குருவாயூர் கோயிலில் மோடி சாமி தரிசனம் செய்யவுள்ளார். அதனையொட்டி கொச்சி மற்றும் குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி அன்றைய தினம் காலை 6 மணி முதல் கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படவுள்ளது. பிரதமர் மோடி வழிபாடு நடத்தி விட்டுச் சென்ற பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கேரளாவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கொச்சியில் இருந்து டெல்லிச் செல்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here