சூரத்தில் உலகிலேயே மிகப்பெரிய வர்த்தக வளாகம்..! வைர பங்குச்சந்தையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி..!

0
79

குஜராத் மாநிலம் சூரத்தில் உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகமாக அமைந்திருக்கும் SDB கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று (டிச.17) திறந்து வைக்கிறார். கட்டிடத்திற்குள் இருக்கும் வைர வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுடனும் அவர் உரையாடுவார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், வைர ஆராய்ச்சி மற்றும் வணிக (டிரீம்) நகரத்தின் ஒரு பகுதியாக இருந்த கட்டிடம், உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக கின்னஸ் உலக சாதனையால் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த வைர வர்த்தக மையம், 6.7 மில்லியன் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. உலகின் வைர வர்த்தக தலைநகராக சூரத்தை மாற்ற பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சூரத்தில் 32 பில்லியன் ரூபாய் மதிப்பில் வைர வர்த்தக மையம் கட்டப்பட்டது.

பாலிஷ் செய்யப்படும் வைரத்தை நேரடியாக ஏற்றுமதி செய்யும் நோக்கில் வைர வியாபாரத்தில் மும்பையை பின்னுக்கு தள்ளும் வகையில் புதிய வைர வர்த்தக மையம் திறக்கப்பட உள்ளது. குஜராத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்ற பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இந்த வைர வர்த்தக மையம் பெரும் உந்துசக்தியாக அமையும் என கூறப்படுகிறது.

தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு மற்றும் ஈயம் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘பஞ்சதடு’ என்ற SDBயின் பிரதியை ஃப்ளோரா ஜூவல்ஸ் பிரைவேட் லிமிடெட் உரிமையாளரான ஜதின் ககாடியா உருவாக்கியுள்ளார். சூரத் வைர வர்த்தக மையத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தினேஷ் நவடியா, இதுகுறித்து கூறுகையில், “மும்பையில் இருந்த பல வைர வியாபாரிகள், ஏலத்திற்குப் பிறகு திறப்பு விழாவுக்கு முன்பே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகங்களுக்கு சென்றுவிட்டனர்.

திறப்பு விழாவிற்குப் பிறகு, சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் அருகே நடைபெற உள்ள பெரிய கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார்” என்றார். மேலும், இது குறித்து அவர் கூறுகையில், பிரதியை உருவாக்க தனக்கு ஏழு நாட்கள் ஆனதாகவும், அதை பிரதமருக்கு பரிசளிப்பதாகவும் கூறினார். மேலும், அந்த பிரதியில் வைரங்களும் பதிக்கப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here