‘துடிப்பான குஜராத் உலக உச்சி மாநாடு’: ஐக்கிய அரபு அமீரகம் அதிபருக்கு மோடி உற்சாக வரவேற்பு..

0
183

குஜராத் மாநிலத்தின் தலைநகரான காந்தி நகரில் ‘துடிப்பான குஜராத் உலக உச்சி மாநாடு’ என்ற பெயரில் மாநாடு இன்று நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பல்வேறு
நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் என ஏராளமானோர் பங்கேற்க இருக்கின்றனர். குஜராத் மாநிலத்தில் முதலீடுகளை ஈர்க்கும்
வகையில் இந்த மாநாடு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த, துடிப்பான குஜராத் உலக உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக
ஐக்கிய அரபு அமீரகம் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்
நேற்று குஜராத்திற்கு வந்தடைந்தார். அகமதாபாத் விமான நிலையம் வந்த அவரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார்.

பின்னர், இருவரும் ஒரே காரில் வாகன ஊர்வலம் சென்றனர். விமான நிலையத்தில் இருந்து 3 கி.மீ., தூரத்திற்கு காரில் ஊர்வலமாக சென்றனர். சாலையின் இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள் இருவரையும் மலர்தூவி வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, மக்களை நோக்கி கை அசைத்தவாறு இரண்டு தலைவர்களும் நன்றி கூறி சென்றனர். ஊர்வலத்தை முடித்துவிட்டு பின்னர் இருவரும் காந்திநகர் சென்றடைந்தனர். தொடர்ந்து இன்று நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here