நடிகர் யஷ் பிறந்தநாளுக்கு கட்டவுட் வைத்த 3 பேர் உயிரிழப்பு..

0
130

பெங்களூரு: ராக்கிங் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் கன்னட நடிகர் யஷ். இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடு வருகிறார். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்திலுள்ள சுரங்கி என்ற கிராமத்தில் அவரது ரசிகர்கள் யஷ்-க்கு கட்டவுட் வைக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, அப்பகுதியைச் சேர்ந்த யஷ் ரசிகர்கள் ஹனமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன் காஜி (19) உள்ளிட்ட 10 பேர் கட்டவுட்டை நிறுத்துவதற்காக ஒரு இடத்திற்கு எடுத்துச் சென்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட்டவுட் மின்சார வயரில் உரசியது. இதனால், மின்சாரம் தாக்கியதால் கட்டவுடை தூக்கிச் சென்றவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். அதில், மூன்று ரசிகர்களும் அலறி துடித்தனர். மேலும், இதில் ஹனமந்த ஹரிஜன், முரளி நடவினமணி, நவீன் காஜி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மின்வாரியத்துறை அதிகாரிகள் உடனடியாக மின்சார இணைப்பை துண்டித்து காயமடைந்த ஏழு ரசிகர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் உயிரிழந்த மூவரது உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here