நாட்டின் 2ஆவது புல்லட் ரயில்.. சென்னை – மைசூரு இடையே இயக்க திட்டம்..

0
150

இந்தியாவில் 2026ஆம் ஆண்டு முதல் புல்லட் ரயில் இயக்கப்படுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த முதல் புல்லட் ரயில் மும்பை முதல் அகமதாபாத் வரையிலான வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.

இதனால், பொதுமக்கள் ஆர்வத்துடன் புல்லட் ரயிலுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதற்குள் அடுத்த புல்லட் ரயில் குறித்த சிறப்பான செய்தி வெளியாகியுள்ளது. நாட்டின் 2ஆவது புல்லட் ரயில் வழித்தடத்தில் தமிழ்நாடும் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னை – மைசூர் இடையே இந்த 2ஆவது புல்லட் ரயில் சேவை திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கா ‘ரூட் மேப்’ தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 435 கி.மீ., தூரத்தை கொண்டுள்ள இந்த வழித்தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புல்லட் ரயில் அதிகபட்சம் 350 கி.மீ., வேகத்தில் இயங்கும் என கூறப்படுகிறது. சென்னை, பெங்களூர், மைசூர் ஆகிய முக்கிய 9 நிறுத்தங்களை கொண்டுள்ளது. விரைவில் இதற்கான செயல் திட்டங்களை தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here