புதிய வகை கொரோனா.. 3,919 பேர் பாதிப்பு..

0
161

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 475 பேருக்கு கொரோனா தொற்று திரிபான ஜேஎன்.1 வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 919 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அந்த வகையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி கர்நாடகாவில் 3 பேருக்கும், சத்தீஷ்காரில் 2 பேருக்கும், அசாமில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வரை இரட்டை இலக்குடன் பதிவான கொரோனா தொற்றின் தினசரி பாதிப்புகள் குறையத் தொடங்கிய நிலையில் குளிர்காலம் தொடங்கி உள்ளதால் ஜேஎன்.1 தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது.

ஜேஎன்.1 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 92 விழுக்காடு பேர் வீட்டில் இருந்தே சிகிச்சைப் பெற்று குணமடைந்துவிடுகின்றனர். தொடர்ந்து, பொதுமக்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here