மிக்ஜாம் புயல் நிவாரணம்: அமித்ஷாவை சந்திக்கவுள்ள தமிழக எம்.பி.,க்கள்..!

0
127

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 3, 4 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக அதிகன மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மிகப்பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

ஆனால், மிக்ஜம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண தொகையை வழங்கக்கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்.பி.க்கள் சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பில் மிக்ஜம் புயல் பாதிப்பு மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கும் நிவாரண நிதியை வழங்கக் கோரிக்கை வைக்க உள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு அரசு கோரிய ரூபாய் 37ஆயிரத்து 907 கோடி நிவாரண நிதியை உடனே வழங்க வலியுறுத்தவுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here