ராமர் கோயில் கும்பாபிஷேகம்: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி கலந்துகொள்ளவில்லை..! என்ன காரணம்..?

0
150

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என போராட்டம் நடத்திய அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் கலந்துகொள்ளப் போவதில்லை என கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேசம்: அயோத்தியில் பிரமாண்டமாக அமையவுள்ள ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில், சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி வரை கும்பாபிஷேக விழா நடைபெறும் என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 22ஆம் தேதி மதியம் கோயில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படுகிறது. கும்பாபிஷே விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆனால், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என போராட்டம் நடத்தியவர்களில் மிக முக்கிய தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளமாட்டார்கள் என தெரிகிறது. அவர்களுடைய வயது மற்றும் உடல்நலனை கவனத்தில் கொண்டு, நிகழ்ச்சிக்கு வரவேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இதனை அவர்கள் இருவரும் ஏற்றுக்கொண்டதாகவும் ராமர் கோயில் அறக்கட்டளை பொது செயலாளர் சம்பத் ராய் கூறினார். ஆனால் தற்போது, ராமர் கோயிலுக்காக போராடிய முக்கிய தலைவர்களை வரவேண்டாம் என கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், பாஜக தவறு செய்வதாகவும், இது எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறுகின்றனர். இந்நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க 4,000 சாமியார்கள், 2,200 சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ள நிலையில் கோயில் கட்டுவதற்கு போராடிய அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here