வாஜ்பாயின் 99ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை!

0
112

டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் துணை ஜனாதிபதி, பிரதமர் மரியாதை உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 99ஆவது பிறந்த நாள் இன்று (டிச.25) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து அடல் பிகாரி வாஜ்பாய் குறித்து அவர் தனது ‘X’ தளத்தில் கூறியதாவது, “நாட்டின் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் சார்பாக, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது ஆழ்ந்த மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் தனது வாழ்நாள் முழுவதும் தேசத்தை கட்டியெழுப்புவதில் ஈடுபட்டார். அன்னை இந்தியாவுக்கான அவரது அர்ப்பணிப்பும் சேவையும் அவரது அழியாத வயதிலும் உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘இந்தி பேசுபவர்கள் தமிழ்நாட்டில் கழிவறை சுத்தம் செய்கின்றனர்’ – தயாநிதி பேச்சுக்குக் குவியும் கண்டனங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here